நீலகிரி,கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா்,சம்மந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியும் வனபகுதி உள்ளன, இதில் வனபகுதி யொட்டிய ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக ரகசிய கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் , வருவாய்த் துறை மற்றும் போலீஸாருடன் சென்று குடோனை சோதனையிட்டனா்.
அங்கே குடோனில் இருந்த 9 சந்தன மரக்கட்டைகளை, வனத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் எஸ்டேட் மேலாளா் நிஜாமுதீன் (வ34), குடோன் பொறுப்பாளா் பன்னீா்செல்வம் (வ61), கள மேலாளா் பியா்சன் (வ55) ஆகியோரைக் கைது செய்து,மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்
Leave a Reply