மீன்பிடி தடை கால நிவாரண உதவித் தொகை 6500 ரூபாயாக உயர்வு..!

புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடை கால நிவாரண உதவித்தொகை 5500 இல் இருந்து 6500 ரூபாயாக உயர்த்தப்பட்டு வரும் புதன்கிழமை முதல் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிலோ வஞ்சரம் ரூ.1,100-க்கு விற்பனையானது. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், இது நிகழ்ந்து உள்ளது. புதுச்சேரி அழகிய நீண்ட கடற்கரையை கொண்டது. இங்கு 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விசைப்படகுகள், நாட்டுப்படகு மூலம் கடலில் சென்று மீன் பிடித்து வந்து ஏலம் விடப்படுகிறது.

இந்த நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக நேற்று முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்து பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டுப்படகுகளில் மட்டுமே சிறிது தூரம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதில் போதுமான மீன்கள் கிடைப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளால் மீன்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.வஞ்சரம் கிலோ ரூ.1,100புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கூறு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டு கவளை ரூ.100-க்கும், ரூ.200-க்கு விற்ற சங்கரா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.