அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்த ஐடி கம்பெனி பெண் ஊழியரும், கால் டாக்ஸி டிரைவரும் கைது.!!

சென்னை சூளைமேடு சக்தி நகர் 5 வது தெருவில் உள்ள அனுராக அடுக்கு மாடி குடியிருப்பில் மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு குடியிருந்து வருபவள் ஷர்மிளா வயது 25 .இவள் ஓ மேகா ஐ டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். இவள் அடுக்குமாடி குடியிருப்பில் கால் டாக்ஸி டிரைவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் போலீஸ் படையுடன் மேலே குறிப்பிட்ட ஷர்மிளா வீட்டை சோதனை போட்டனர். சோதனையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் எடை போடும் தராசு இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மிளாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை இவளுக்கு உடந்தையாக திருத்தணியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டான் . இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..