காஷ்மீரில் ‘அக்னி பாத் ‘க்கு ஆள் தேர்வு – ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்..!!

ம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது.

இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் சிறிய தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். நான்கு ஆண்டு பணி முடித்த பிறகு, அவர்களுக்கு ரூ.12 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

அதன்படி, தற்போது காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் அக்னி வீரர்கள் தேர்வுக்கான பணி நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள அவரவர் கிராமங்களிலேயே 2 மாத பயிற்சிக்கு ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.