குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 6 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல் இருந்தால், நாளை முதல் அந்த கார்டுகள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இறந்தவர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருந்தாலும், அவற்றை முடக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது வெறும் உணவு பொருட்கள் வாங்கும் அட்டையாக மட்டும் இல்லாமல், பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு அடிப்படை அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் விலையில்லா உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலன்கள் மக்களிடம் சென்று சேர்கின்றன.
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சம் குடும்ப அட்டைகள் செயலில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7 கோடியே 46 லட்சம் மக்கள் நன்மை பெறுகின்றனர். தற்போதைய டிஜிட்டல் மாற்றத்தால் இவை அனைத்தும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாறியுள்ளன.
அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் 35 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெறுகின்றனர். மற்ற சாதாரண குடும்ப அட்டையாளர் 20 கிலோ அரிசி பெறுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களின் அளவு மாறுபடும்.
ரேஷன் கார்டுகள் மூலம் உணவும் வழங்குவதில் தற்போது மத்திய அரசின் பங்கும் கணிசமாக இருக்கிறது. குறிப்பாக அரிசி, மத்திய அரசின் தொகுப்பில் இருந்தே வழங்கப்படுகிறது. இதை அடுத்து ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. குடும்ப அட்டைகள் எங்கு இருந்தாலும் எங்கு வேண்டுமானாலும் நாம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது.
அதாவது இறந்தவர்களின் பெயர்கள், ஒரே குடும்பத்துக்கு இரண்டு குடும்ப அட்டைகள் என மொத்தம் 36 லட்சம் போலி குடும்ப அட்டைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அதிரடியான திட்டத்தை முன் வைத்திருக்கிறது. 6 மாதங்களுக்கு மேலாக ஒரு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை முதல் அந்த ரேஷன் கார்டு முடக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு, இடம் பெயர்ந்த பின்பு தனித்தனி ரேஷன் கார்டு போன்ற தகுதியில்லா ரேஷன் கார்டுகள் முடக்கப்பட இருக்கிறது. நாளை முதல் இந்த ரேஷன் கார்டுகள் முடக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80 கோடி மக்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள்.இவற்றில் சுமார் ஒன்றரை கோடி ரேஷன் கார்டுகள் ஆறு மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து அந்த ரேஷன் கார்டுகளை முடக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை தவறுதலாக உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்பட்டால் இகேஒய்சி மூலம் அந்த காடுகளை மீட்டெடுத்துக் கொள்ளலாம் என்கிறது மத்திய அரசு. எனவே ரேஷன் கார்டுகளை யாராவது பயன்படுத்தாமல் இருந்தால் இன்று கூட அருகில் உள்ள ரேஷன் கார்டுகள் கடைகளில் பயன்படுத்தி கொண்டால் முடக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர்.







