கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தின் எதிர்புறம் “பெரியார் அறிவுலகம்” என்ற பெயரில் பிரம்மாண்டமான நூலகம் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ரூ300 கோடியில் கட்டப்பட்ட இந்த நூலகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். 7 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தின் முதல் தளத்தில் கண்காட்சி மற்றும் அறிவியல் மையமும், 2 -வது தளத்தில் சிறுவர்களுக்கான நூலகம், 3-வது தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் நூலகமும் 4-வது தளத்தில் தமிழ் நூல்கள் மற்றும் வரலாற்று புத்தகங்கள், பருவ இதழ்களும்5 மற்றும் 6வது தளத்தில் ஆங்கில நூல்கள் ஆராய்ச்சி பிரிவும், 7-வது தளத்தில் நவீன் டிஜிட்டல் நூலகமும் உள்ளது. இந்த .நிலையில் பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது .அகல் விளக்கு, பினிக்ஸ் ஆகிய பதிப்பகங்களில் இருந்து போலியான புத்தகங்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை யடுத்து நூலகத்தில் ஆய்வு செய்து அங்கிருந்த 1800 புத்தகங்கள் அகற்றப்பட்டன .இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த வாரம் நூலகத்தில் அதிரடி சோதனை செய்தனர் அத்துடன் நூலகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் நூலகத்துக்கு “வின்டேஜ் பிரஸ் லிமிடெட்” என்ற பெயரில் உள்ள பதிப்பகத்தில் இருந்து போலியாக 257 ஆங்கில புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த புத்தகங்களுடன் அங்கிருந்து அகற்றப்பட்டு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2-வது முறையாக நூலகத்தில் நேற்று சோதனை செய்தனர் .அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆய்வு செய்தனர். அதில் போலியான புத்தகங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.அத்துடன் போலியான முகவரி கொண்ட பதிப்பக புத்தகங்கள் உள்ளதா? என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரியுடன் இணைந்து ஆய்வு செய்தனர் .காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது பெரியார் நூலகத்தில் 4, 5, மற்றும் 6-வது தளத்தில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு புத்தகங்களை படிக்க வந்தவர்களை போலீசார் தடுக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. போலி புத்தகங்கள் வாங்கியது தொடர்பாக பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2 -வது முறையாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை







