தோட்டத்து வீட்டிற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது . அடிக்கடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன .இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நேற்று காலை 3 மணி அளவில் வந்த காட்டு யானை ஒன்று வனப் பகுதி அருகே கணுவாய் குதிரைக்காரர் தோட்ட பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்தது. யானையை பார்த்ததும் அந்த வீட்டி ல் இருந்த நாய் விடாமல் குறைத்தது. ஆனால் யானை அந்த நாயை கண்டு கொள்ளவே இல்லை .அந்த வீட்டின் முன்பு இருந்தவெளி அறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பாத்திரங்களை தும்பிக்கையால் தொட்டு பார்த்துவிட்டு அங்கு எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் அருகில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் சென்று விட்டது .காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.அது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .மேலும் பன்னீர் மடை அருகில் உள்ள தாளியூர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் காட்டுயானை புகுந்தது. அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது. வீட்டுக்குள் வந்த யானை உணவு தேடி சென்றதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.