குப்பை முதல் இறந்த நாய்கள் வரை… இருகூரில் தினமும் எரிக்கப்படும் அவலம்!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட Ginning Factory Road, புதிய காலனி,எல் ஜி நகர், ஆகிய பகுதிகளில் வசித்து வருகிறோம். நாங்கள் முறையாக அனைத்து வரிகளும் கட்டி பேரூராட்சி அனுமதி பெற்று கட்டிடம் கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் எங்களது பகுதியில் ஊரில் உள்ள குப்பைகளையும் , கோழி கழிவுகள், இறந்த நாய்கள் போன்றவற்றை இங்கே கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

இருகூர் பேரூராட்சி ஊழியர்கள் தினமும் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் இப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. சுகாதார சீர்கேடு காற்று மாசடைதல் போன்ற சுற்று சூழல் பாதிப்பால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் சுவாச கோளாறு ஏற்படும் நிலையில் உள்ளது. அதேசமயம் மக்கள் பயன்படுத்தும் சாலையை ஒட்டி தீயிட்டுக் கொளுத்துவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கே செயல்பாட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கு நந்தவனம் போலவும் மக்கள் வசிக்கின்ற பகுதி மற்றும் வழித்தடங்கள் திடக்கழிவு மற்றும் குப்பைமேடு போலவும் காட்சியளிக்கின்றது.

எனவே நாங்கள் பல முறை கூறியும் இதற்கு இருகூர் பேரூராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக Swachh Bharat, Muthalvarin Mugavari Department (CM cell)
கவனத்திற்கு கொண்டு சென்றோம். இந்த குப்பை கழிவுகளை எடுத்து சுத்தம் செய்ய இருகூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு Muthalvarin Mugavari Department இணைய வழி செய்தி அனுப்ப பட்டு இதற்கு தீர்வு காண பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், மெத்தனமாக செயல்படும் இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மனு கொடுத்த மக்களுக்கு பதிவு தபால் வழியாக கடிதம் கொடுத்து நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால் இன்று வரை இதற்கு சரியான முறையில் தீர்வு காண படவில்லை.

இதற்கு சரியான முறையில் தீர்வு கண்டு இந்த கழிவுகளை நிரந்தரமாக இங்கே இருந்து கொட்டாத வண்ணம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள் இனிமேல் ஆவது திருந்துவார்களா..

இதற்கு நிரந்தர தீர்வாக பேரூராட்சி நிர்வாகம் தெருவிளக்குகள் அமைத்தல் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் யாரும் குப்பை கொட்டாதபடி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இங்கே இயற்கையை பாதுகாக்க மரங்களை நட்டு பராமரிக்க
சமூக சேவகர்கள் தயாராக உள்ளார்கள். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும். மேலும் CCTV கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்பது இப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்பினர் ஆகியோரது வேண்டுகோள்.