இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானியங்கள் முகாம்..!

இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் கலந்து கொண்டு சிறுதானியத்தில் செய்யப்பட்ட பாயாசம், அவல் உருண்டை, அடை,ரொட்டி,துவையல் உணவு பண்டங்கள் செய்து காட்சிபடுத்தியதை பார்வையிட்டு சுவைத்து பார்த்தார். நிகழ்ச்சியில் முகமது சதக் ஹமிது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எம் மீரா வரவேற்புரை வழங்கினார். முகமது சதக் ஹமிது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானியங்களின் பயன்களை குறித்த கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய அமைவனம் முதுநிலை இயக்குனர் எஸ் டி தயானந்த் , ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மாவட்ட திட்ட அலுவலர் பார்வதி சமூக நல அலுவலர் வி தேன்மொழி இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் M.முத்து முருகன் இராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் B. கோட்டைச்சாமி திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் A .உடைய தேவர் இராமநாதபுரம் நகர கழக செயலாளர் M.பாலசுப்பிரமணியன் போகலூர் ஒன்றிய கழகச் செயலாளர் Ex- மாவட்ட கவுன்சிலர் A.G சுரேஷ். மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் A.G சிவக்குமார் (ஊராட்சி மன்ற தலைவர் பெருங்குளம் ) மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி இராமநாதபுரம் தொகுதி கழக செயலாளர் M.முத்துப்பாண்டி முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி திருப்புல்லாணி ஒன்றிய கழக அவைத் தலைவர் சந்திரன் ராமநாதபுரம் நகர் இளைஞர் அணி ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய மக்கள் தொடர்பாக சென்னை இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் டி ஜெயராஜ் நன்றி தெரிவித்தார்..