போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கியும், தரையில் தரதரவென இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றியதால் தஞ்சையில் பரப்பரப்பு.!!

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று. தரையில் தரதரவென இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதால் இரு தரப்பினருக்கும இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் முறைகேடாக தனக்காக வாங்கி எடுத்துக் கொண்ட கடன் முழுவதையும் தீர்த்து ஏழாயிரம் விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடுவித்து கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் முறைகேடான கடனுக்கு துணைபோன வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பணம் முழுவதையும் புதிய கால்ஸ் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு பெற்று தர வேண்டும்.
ஆலை நிர்வாகம் விவசாயிகள் வாங்கிய கரும்பு பயிர் கடனை கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து கொண்டு வங்கிகளுக்கு அனுப்பாத பயிர் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரு ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கடந்த 300 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்று வழுக் கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றினர் இதில் விவசாயிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அந்த பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார் ,காசி .சாமிநாதன், ஆகியோர் தலைமை வகித்தனர்.
 கண்ணன், நாக .முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ், கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை .பாண்டியன், விவசாயிகள் சங்க பொருளாளர் பழனிய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தஞ்சை மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர் .