ஜப்பான் பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலையை பரிசளித்த பிரதமர் மோடி..!

ந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்து கடம்வூட் ஜாலி பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை பரிசாக வழங்கினார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வெளியே அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு கர்நாடகாவின் கலையைப் போற்றும் விதமாக மர பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை வைத்து அதனை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

சந்தனமரத்தை செதுக்கும் கலை ஒரு உன்னதமான மற்றும் பழமையான கைவினை ஆகும். இந்த கலை தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த கைவினை மிகவும் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் செதுக்குதலை உள்ளடக்கியது. சந்தன மரம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க மரங்களில் ஒன்றாகவும் சந்தனமரம் கருதப்படுகிறது.

புத்தரின் உருவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அழகான அமைதி மற்றும் சக்தி வாய்ந்த சின்னமாக புத்தர் கருதப்படுகிறார். புத்தரின் இந்த சந்தன சிற்பங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. சேகரிப்பாளர்கள் மற்றும் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இதனை தேடி வாங்குவர். இந்த புத்தர் உருவம் தூய சந்தன மரத்தில் கைவினைஞர்களால் செதுக்கப்பட்டது. இதில் பாரம்பரிய வடிவமைப்புகள் மற்றும் இயற்கை காட்சிகள் அடங்கியிருக்கும். மேலும் இதில் புத்தர் போதி மரத்தின் கீழ் தியான முத்திரையில் அமர்ந்திப்பார். இது பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. போதி மரத்தின் கீழ் தியானம் செய்யும் போதுதான் புத்தருக்கு ஞானம் கிடைத்தது. அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையின் முன்புறம் சிக்கலான செதுக்கலைக் கொண்டுள்ளது. பின் புறம் போதிமரம் செதுக்கப்பட்டிருக்கும்.