கோவை விளாங்குறிச்சி ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 48 )காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி அவரிடம் பணம் கேட்டார், அவர் கொடுக்க மறுத்தார் .அதனால் அவர் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தின் அருகே கொண்டு சென்று பணத்தை கொடுக்க விட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவரிடமிருந்த செல்போன்.பணம் ரூ.2400 ஆகியவற்றை பறித்துக் கொண்டான்.உடனே ஸ்டீபன் ராஜ் சத்தம் போட்டார் .பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கம் உள்ள சிவந்தி புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது 24)) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து ஒரு கத்தி, பணம் ரூ. 2400 பறிமுதல் செய்யப்பட்டது .இவர் மீது கோவையில் ஏற்கனவே 2 திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது.
Leave a Reply