நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்கின்றனர். இதனால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். விழுந்து விட மாட்டோம். அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். சோதனைக்கு வந்த அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளனர். காவலாளியிடம் அவர்கள் கூறியிருந்தால் உள்ளே அனுமதித்து இருப்பார்கள் என்றார்.
வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி கூறியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவோம். கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். இதுபோன்ற சோதனைகளுக்கு நாங்கள் பயந்து விடமாட்டோம். எவ்வளவு வழக்குகள் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்.
Leave a Reply