அடேங்கப்பா!! மின்துறை அமைச்சர் ஆதரவாளர்கள் ரூ.150 கோடி வரி ஏய்ப்பு.!!

சென்னை : மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், டாஸ்மாக் முகவர்கள், அவர்களின் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, தமிழகம் முழுவதும், 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை, இம்மாதம் 26ம் தேதி துவங்கியது.
நான்காவது நாளாக நேற்று, 20 இடங்களில் சோதனை தொடர்ந்தது.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:நான்கு நாட்களாக நடந்த சோதனையில், இதுவரை, 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.