முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது முறையாக ரெய்டு.!!

கோவை : கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்குச் நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 58 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல்லில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும், கேரளாவில் ஒரு இடத்திலும் என மொத்தம் 58 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.