கோவையில் கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு கல்வி உதவி-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.!!

கோவை மாநகரில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.இதன்படி காவல் நிலையங்கள் வாரியாக பள்ளி- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இதே போல காவல் நிலையங்கள் வாரியாக சந்தர்ப்ப சூழ்நிலையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி புரிய முயற்சி செய்தார். இதன்படி காவல் நிலையங்கள் வாரியாக கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆர். எஸ். புரம் காமராஜ் புரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 23 )இவர் 2021 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக இவரது உடன் பிறந்த தம்பி பிரசாந்த் (வயது 19) தனது படிப்பை பாதியில் நிறுத்தினார். இந்த விவரங்களை ஆர். எஸ் புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் கண்டறிந்து மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து மாணவர் பிரசாந்துக்கு தொண்டாமுத்தூரில் உள்ளஅரசு கலைக் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிப்பதற்கான உதவியை செய்தனர். அவர் மகிழ்ச்சியுடன்கல்லூரிக்கு சென்று வருகிறார்.காவல்துறையினரின் இந்த சமூக சேவையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.மேலும் நகரில் இதேபோல கொலை செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.