நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழாவை சுற்றுலா அமைச்சர் துவங்கி வைத்தார்…

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார், விழாவின் துவக்கமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த, விழா சிறப்பு விருந்தினர்களை பொங்கல் வாழ்த்து கூறி அனைவரும் வரவேற்று பேசினார் உதகை நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் பேசியதாவது உலகம் எங்கிலும் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது நமது தமிழர் தமிழக முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணத்தோடு திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் சமத்துவ பொங்கல் ஆக தமிழகம் எங்கிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று இந்தப் பொங்கல் திருநாளில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளோடு கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார், தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் சிறப்புரை ஆற்றியதில் இந்தப் பொங்கல் விழாவில் தமிழக முதல்வரின் ஆணிக்கிணங்க சமத்துவ பொங்கல் உதகை அரசு தாவிரியில் பூங்காவில் சுற்றுலாத் துறை சார்பாக நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார், சமத்துவ பொங்கல் விழாவில் வருகை புரிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அனைவரையும் நாட்டுப்பற்றோடு இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேசன் அவர்கள் சிறப்புரையில் கூறியதாவது இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவில் அரசு தாவரவியல் பூங்காவில் வருகை புரிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு இந்த இனிய பொங்கல் நாளில் அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் அமைந்து துன்பமெல்லாம் நீங்கி விவசாயம் பலன் பெற்று குடும்ப ஒற்றுமையிலும் சுகத்திலும் வாழ அனைவரும் வாழ்த்துகிறேன் என்று கூறினார், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவில் சிறப்புரையின் கடந்த மூன்று நாட்களாக உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் மிக விமர்சியாக கொண்டாடும் வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் உதகை வரலாற்று சிறப்புமிக்க அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சார்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வந்திருக்கக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று காணும் பொங்கலை விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வரும் சுற்றுலாத் துறைக்கும் சுற்றுலா அமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வருகை தந்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறினார், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு அருணா இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரையில் இன்று கொண்டாடி வரும் தமிழர் சமத்துவ பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதிலும் பலவிதமான போட்டிகள் குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் என மற்ற மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது நீலகிரி மாவட்டத்தில் அதுபோன்ற நிலைகள் இல்லாமல் போனாலும் கூடலூர் மசினகுடி தெப்பக்காடு பகுதியில் யானைகள் முகாமில் வெகு சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சி அனைத்து சுற்றுலா பயணிகளும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது இந்த முறை நான் அதை முதல் முறையாக கண்டபோது வெகு சிறப்பாக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்,நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு தனித்துவ தன்மைகள் இருக்கிறது, பழங்குடியினரின் தனித்துவம் கலாச்சாரம் உள்ள நீலகிரி மாவட்டம் அதிகமாக இருப்பதால் அதை கட்டி காத்து ஒருங்கிணைந்து ஒன்றாக கூடி வரும் நாட்களில் பொங்கல் விழாவை இன்னும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வாழ்த்தி கூறி விடை பெற்றார், நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பொங்கல் திருநாளை
மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள்,
அதனடிப்படையில், தமிழகத்தில் தமிழர்களின் மரபு, பண்பாடு கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத்திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவானை முதலில் தரிசிப்பது தான் இப்பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். சூரியன் இல்லையென்றால் எந்தவொரு செயலும் நடைபெறாது. எனவே சூரியபகவான், இயற்கை வளங்கள் அனைத்தையும் தரிசித்து, கால்நடைகளை வழிபட்டு இப்பண்டிகையினை கொண்டாடி வருகிறோம் என்றார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சாதி, மத, இன, மொழி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். என்ற நோக்கத்தில் சமத்துவபுரம் என்ற ஒரு திட்டத்தினை கொண்டு வந்தார்கள். அதனடிப்படையில் எந்தவொரு பாகுபாடுமின்றி இந்த சமத்துவ பொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத்தொழில் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும் என்றார், அனைவரும் சாதி மதமின்றி ஒன்றுசேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்,
பரதநாட்டியம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் போன்ற
கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டினார், இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஷிபிலாமேரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஷ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதகை வட்டாட்சியர் சரவணகுமார், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர், நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்றது, இப்போட்டியில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் அவர்கள் சேலம் மாவட்டத்தை சார்ந்த சுற்றுலா பயணி பூபதி சுகன்யா இசை நாற்காலி போட்டியில் முதல் பரிசு பெற்றார், மற்றும் சாக்கு பை போட்டியில் நிஷாந்த் முதல் பரிசு பெற்றார், மற்றும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது உடன் பூங்கா மேலாளர் மற்றும் துணை சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர் விழா நிறைவு பெற்றது.