கோவை நீதிமன்றம் வளாகத்தில் நடந்த ரவுடி கொலையில் மேலும் 6 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கோபாலபுரம் 2 -வது வீதியில் ஒரு பேக்கரி முன் கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25 ) என்பவர் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைஊட்டிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 7 பேரை கைது செய்தனர் .இதையடுத்து மேலும் 6 பேர் என இந்த கொலை வழக்கில் மொத்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான சூரியா ( வயது 23) மீன்கடை கார்த்திக் ( வயது 28) டேனியல் ( வயது 23) ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார் .இந்த நிலையில் விக்ரம் ( வயது 21) சிவிக்சன் பெர்னார்ட் என்ற சின்னு ( வயது 23) விஷ்ணு பிரகாஷ் என்ற விக்கி (வயது 24) பரணி சவுந்தர் (வயது 20) ஹரிஹரன் என்ற கவுதம் ( வயது 24 )அருண்குமார் ( வயது 21 )ஆகிய மேலும் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தார். இந்த உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த 6 பேரிடம் வழங்கப்பட்டது.