அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு தீவிர சிகிச்சையில் இருந்து 3 மாணவிகள்- பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்..!

நீலகிரி மாவட்டம், ஊட்டியை அருகே உள்ள பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்சில் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் சேலம் அருகே இறந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மற்றும் மூன்று மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஓரளவு நலமடைந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அந்த மாணவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்..