பிளஸ்-2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்- லோடுமேன் போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது லோடு மேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனை சந்தித்தார். அப்போது வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.

பின்னர் அவர் மாணவியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்தார். இதனையடுத்து அவர் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற தங்களது மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபருடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். அவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரையும் கைது செய்தனர்.

இது குறித்து கோட்டூர் போலீசார் பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.