மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா – இன்று தொடங்கியது.!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை 7 – 30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. அப்போது நவ கிரக வேள்வி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை வாஸ்து சாந்தி பூஜை, தீபாரதனை நடைபெறுகிறது. 24ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) காலை 7:00 மணி முதல் 12 மணி வரை நான்காம் கால வேள்வி, மூல மந்திரம், அர்ச்சனை நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை 4:30 மணி முதல் 8 மணிக்குள் ஐந்தாம் கால வேள்வி சண்முக ரச்சனை மற்றும் வேள்வி பூஜை நடக்கிறது. தொடர்ந்து வள்ளி -தெய்வானை முருகப்பெருமான் தங்கரதத்தில் திருவீதி உலா வருகிறார்கள்.மறுநாள் 25ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து ஆறாம் கால பூஜை நடக்கிறது.. பின்னர் காலை 9 மணிக்கு மகா கணபதி பூஜை, தீபாரதனை நடக்கிறது .காலை 10:15 மணிக்கு மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு கலசங்களால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.