செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது.
இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு!
-பிரதமர் மோடி தன் உரையில் திருக்குறளை குறிப்பிட்ட பிரதமர் மோடி
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
முதல் போட்டியில் டாப் சீட் அணிகள் கறுப்பு நிறத்தில் ஆடுவார்கள்.
முதல் போட்டியின் டாப் சீட் அணிகளுக்கான நிறத்தை தேர்வு செய்தார் பிரதமர் மோடி.
ஓப்பன் & பெண்களுக்கான முதல் போட்டியின் டாப் சீட் அணிகளுக்கான நிறத்தை தேர்வு செய்தார் பிரதமர் மோடி. அதன்படி ஓப்பன் அணிகளின் டாப் சீட் அணியான அமெரிக்காவும், பெண்கள் அணியின் டாப் சீட் அணியான இந்தியாவும் கறுப்பு நிறத்தில் விளையாடவுள்ளன. போட்டியில் இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்குத் தொடங்கும்.
பிரதமர் மோடி தன் உரையை தொடங்கினார்!
பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடப்பது பெருமையாக இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் நடப்பது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது. இது இந்தியாவுக்கான பெருமைமிகு தருணம் என்பதை பிரதமர் மோடி அறிந்து இருப்பதாலேயே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை தொடங்கிவைக்க வந்திருக்கிறார். பிரதமருக்கு செஸ் மிகவும் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். மோடி அவர்கள் முதல்வராக இருந்த போது, 20000 வீரர்களை வைத்து செஸ் போட்டிகளை நடத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட செஸ் விளையாட்டின் ஆர்வலர் , இந்த விழாவைத் தொடங்கி வைக்க வந்திருப்பது சாலப் பொருத்தமான ஒன்று. : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
செஸ் மஸ்கோட்டுக்கு தம்பி என பெயர் சூட்டியிருக்கிறோம். தம்பி என்பது சகோதரத்தின் வெளிப்பாடு. நாம் எல்லாம் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதன் வெளிப்பாடு அது . தமிழ்நாட்டின் ஆகப்பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா எல்லோரையும் அன்பாக ‘தம்பி ‘ என்றே அழைப்பார். அப்படிப்பட்டதொரு அடைமொழியை பெருமைப்படுத்தவே , மஸ்காட்டுக்கு தம்பி என பெயர் சூட்டியிருக்கிறோம்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதல்வர் மற்றும் பிரதமரிடம் வழங்கினார் விஸ்வநாத் ஆனந்த்!
ஆர்காடி ட்வோர்கோவிச், FIDE தலைவர் உரை!
மாபெரும் செஸ் திருவிழாவான செஸ் ஒலிம்பியாடை குறுகிய இடைவெளியில் நடத்தி காட்டிய இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி!
மத்திய அமைச்சர் எல். முருகன் உரை
8 ஆண்டுகளாகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்து வருகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடக்க பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தான் மிக முக்கிய காரணம்.
தீ, மாரியம்மாள் குரலில் Enjoy Enjaami பாடல்!
அமைச்சர் மெய்யநாதன் உரை
தமிழ்நாடு அரசும், AICFம் தோளுக்குத் தோளாக நின்று நேரத்துடன் போட்டியிட்டு இந்த செஸ் ஒலிம்பியாடுக்கான பணிகளைச் செய்திருக்கிறோம். இந்தப் பணிகளுக்கான எல்லா விதமான ஒத்துழைப்பையும் நல்கிய மத்திய அரசுக்கு நன்றி. இப்படியானதொரு பிரமாண்டமான அளவில் ஒலிம்பியாடினை நடத்துவதற்கு ஒன்றிய அரசின் தொடர் ஊக்குவிப்பும், பாராட்டும் காரணம். பிரதமர் மோடியை இந்த நிகழ்வுக்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் : அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்
பிரதமர் மோடிக்கு நினைவு சின்னம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
கமல்ஹாசனின் குரலில் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி
எங்கள் கலைஞர்களும், வல்லுநர்களும் காலத்தை முந்தி யோசித்தவர்கள். அதைப் பற்றிப் பேச என்னைவிட யார் இருக்கிறார்கள். தமிழர் வரலாற்று ஒலி நிகழ்வில் கமல்ஹாசன்
தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா!
நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை!
வழிநெடுக உற்சாக வரவேற்புடன் தொடக்க விழா நடைபெறும் நேரு மைதானத்ததிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் ஓவியம்!
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் ஒருவப்படத்தை மணலை கொண்டு ஓவியம் வரைந்தார் ஓவியர் சர்வம் பட்டேல்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் ஓவியம்!
ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார் பிரதமர் மோடி.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார் பிரதமர் மோடி.
தொடக்க விழாவில் லிடியன் நாதஸ்வரனின் இசை நிகழ்ச்சி.கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களால் இசை வாசித்து கலக்கிய லிடியன் நாதஸ்வரன்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி.
சதுரங்க கரை பதிந்த வேட்டி சட்டையில் சென்னைக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. சிறிது நேரத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு வீரர்களை வழிநடத்திச் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்குபெரும் நாடுகளின் கொடி அணிவகுப்பு. மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அணிகளை வழிநடத்தினர்!
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்குபெற சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.
Leave a Reply