தமிழர் பாரம்பரிய உடை.. சதுரங்க கரை வச்ச வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரத்துடன் வந்து அசத்திய பிரதமர் மோடி..!!

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு செஸ் கட்டம் போட்ட கரை கொண்ட வேஷ்டி சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.

சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்தில் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி வருவதற்குள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அவர் வானிலை மாற்றத்தினால் வேறு விமானத்தில் வர 25 நிமிடங்கள் தாமதமாகின. இந்த நிலையில் அவர் சரியாகத 5.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னைக்கு வந்துள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிந்து கொண்டு வந்துள்ளார். அவர் அணிந்துள்ள வேஷ்டியில் சதுரங்க கட்டங்கள் போடப்பட்டுள்ளன. அது போல் அங்கவஸ்திரத்திலும் சிறிய சிறிய சதுரங்க கட்டங்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு அழகாக உள்ளன.

வழக்கமான ஜிப்பா பேன்டில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி தமிழர் உடையில் வந்திருப்பது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. இவரது உடையை பார்த்து தமிழக பாஜகவினர் பூரிப்படைந்துள்ளாரகள். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கடந்த 2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்திருந்தார். மேலும் சீன அதிபருடனான விருந்து நிகழ்ச்சியில் கூட தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளே பரிமாறப்பட்டன. இதனால் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பெருமிதம் பொங்க பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தார்கள்.