கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்கள்185 பேருக்கு பயிற்சி நிறைவு…

தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்இரண்டாம் நிலை காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்குகோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது..இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,அணிவகுப்பு கவாத்து ,கலவரத்தை ஒடுக்குதல், கவாத்து, சட்டம் -ஒழுங்கு வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது . விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பயிற்சி முடித்த காவர்களுக்கு போலீஸ்நிலையங்களில் பணியாற்றுவது எப்படி? புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?என்பது குறித்து அறிவுரை வழங்கினார். பின்னர் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் மேனுவல் வரவேற்றார்.