கோவை நகை வியாபாரிடம் ரூ. 75 லட்சம் தங்கம் மோசடி பட்டறை அதிபர் மீது வழக்கு…

கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ தங்க கட்டியை கொடுத்து நகைகளாக செய்து தருமாறு கூறினார். அதன்படி நகைகள் வடிவமைத்து தருவதாக கூறி தங்க கட்டியை வாங்கிய பாண்டியன் 321. 55 கிராம் தங்கத்தை மட்டும் நகைகளாக செய்து திருப்பி கொடுத்துள்ளார் .மீதி 1412.840 கிராம்தங்கத்தை நகைகள் செய்து கொடுக்கவில்லை. இவற்றின் மொத்தம் மதிப்பு ரூ.75லட்சம் ஆகும் .இதனால் ஏமாற்றம் அடைந்த திலீப்குமார் தான் கொடுத்த தங்கத்தை திருப்பிதருமாறு பாண்டியனிடம் கேட்டார் .ஆனால் அவர் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து திலீப் குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . போலீசார்மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.