வரும் 31ம் தேதி பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை விளக்கம்..!

பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று  அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தொழிலதிபர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வரும்போது, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இதுபோன்ற பந்த்-க்களை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பிறகு இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், இந்த பந்த் என்பது தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மூலமாக தான் அக்.,31ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கப்படவில்லை, அதனை ஆதரிக்கவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் செவ்வாய் கிழமைக்கு (நவம்பர் 1) ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பில் இருந்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்க்கிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், பந்த் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா என்றும் நீதிபதிகளிடம் விளக்கம் பெற்றனர்.. அதற்கு நீதிபதிகள் பந்த் நடைபெற்றால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி அளித்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தனர்..

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை மனுதாரர் தரப்பிலோ, காவல்துறை தரப்பிலோ இடைக்கால உத்தரவு எதுவும் கேட்கப்படவில்லை.. இந்த வழக்கு தொடங்கிய உடனே பாஜக தரப்பில் அழைக்கப்பட்ட பந்த் அறிவிப்பாக தான் இருக்கிறது, அதை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. எனவே பந்த் என்று நடத்துவதா? போராட்டம் என்ற முறையில் நடத்துவதா? என்று முடிவெடுக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதிகள் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் இருதரப்பு விளக்கங்களை அளியுங்கள் என்று தெரிவித்தனர்.