ஆன்லைன் ரம்மியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.!!

ஆன்லைன் ரம்மியை தடுப்பதற்கு விரைவில் புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

ஆன்லைன் ரம்மியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வலுவாக சட்டம் உருவாக்கவில்லை என்றும் நீதிமன்றம் தள்ளுபடி செல்லும் வகையில் வலுவில்லாமல் அந்த சட்டம் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்