கணவர் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் என்ற மாவட்டத்தில் உள்ள காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் தனது ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்து உள்ளார். அலறிக்கொண்டே தண்ணீருக்குள் விழுந்த குழந்தைகள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்படி உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த அனைத்து குழந்தைகளையும் மீட்டனர்.
ஆனால் அந்த குழந்தைகள்அனைத்தும் உயிர் இழந்து விட்டது. அதன்படி நீரில் மூழ்கிய குழந்தைகளில் 18 மாதம் ஆன பச்சிளம் குழந்தை உட்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண்குழந்தைகள் அடங்கும். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறு இன் போது அந்தப் பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் அதனால் வெறுப்படைந்த அவர் பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply