வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது-உயர்நீதிமன்றம் அதிரடி.!!

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களில் எந்த காரணத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி “நம் பூமி மீது ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் கழிவுநீர் கால்வாயாக மாறிள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த இயற்கை வளங்கள் நம் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும் எனவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையும் மேற்கோள்காட்டி வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.