சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்கர்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இருவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்ட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 14 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.