கோவைபுதூர் கோகுலம் காலணியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (வயது 63) எம்,பி.பி.எஸ். டாக்டர்.இவரது சொந்த ஊர் கேரளா, இவர் குடும்ப தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து கோவை புதூரில் தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.நேற்று அவரது வீட்டின் உரிமையாளர் முகமது அகிப்கான் அவருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் டாக்டர் ராமச்சந்திரன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இவர் எப்படி செத்தார்?என்று தெரியவில்லை. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.