கோவை பெட்டிக்கடையில் 12 கிலோ குட்கா பறிமுதல்-வியாபாரி கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம், காந்தி நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 59 ) நேற்று இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 12 கிலோ எடை கொண்ட 76 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக சோமசுந்தரம் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.