பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு

பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள தாய்முடி எம்.டி. 7 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில்  ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டியும் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரின் உத்தரவிற்கிணங்க வன உயிரின மேலாண்மை பயிற்சி மைய உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் வனக் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் வீரராகவன் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், தன்னார்வலர் கணேஷ்ரகுநாதன், ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் அன்வர், தாய்முடி மேலாளர் மேரான், உதவி மேலாளர் கல்பாசத்தி மற்றும் வனப் பணியாளர்கள் முன்னிலையில் இன்று இறந்த பெண் காட்டு யானை மற்றும் குட்டி காட்டு யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த பெண் யானை சுமார் 35 லிருந்து 40 வயது இருக்கலாம் என்றும் அவைகளின் உடல்களிலிருந்து கிட்னி, இதயம், குடல் மற்றும் நுரையீரல் ஆகிய உடற்கூறு மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக சேகரம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசவத்தின் போது குட்டி யானை இறந்திருக்கலாம் எனவும் இறந்த பெண் யானை பிரசவ வலியால் இதயம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவருவதாகவும் ‌மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த பெண் யானை மற்றும் இறந்த குட்டி யானையின் உடல்கள் தொழிலாளர்களின் குடியிருப்பின் அருகில் இருப்பதாலும் குடிநீர் ஆதாரம் அருகில் இருப்பதாலும் மருத்துவரின் ஆலோசனைப் படி சம்பவப் பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது