75 வது சுதந்திர தின பவள விழா மாரத்தான்

புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான்

புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ஜோதியை கையில் ஏந்தி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது .

மராத்தான் நிகழ்வை விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பொதுத் தேர்வு, அறிவியல் கண்காட்சி , தனித் திறன் உள்பட பல துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் கெ.ஓ.ம அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயின்ற முதல்வர் கோப்பை வென்ற ஹாக்கி வீராங்கனைகள் காவ்யா, நந்தினி , புஞ்சை ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் மாவட்ட, மாநில அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நிக்கிலன் ஹரிஹேஸ், சிவதர்சன் , அம்மா மெட்ரிக் மேல் நிலை பள்ளியை சேர்ந்த அபர்ணா ராணி, எஸ்.ஆர்.சி.மெட்ரிக்  மேல் நிலை பள்ளியை சேர்ந்த ஜெய் சந்தோஷ், ஹரிஹரசுதன், மாமகரிஷி மெட்ரிக் மேல் நிலை பள்ளியை சேர்ந்த காவ்யா, லக்க்ஷனா, எஸ்.என்.ஆர் மெட்ரிக் மேல் நிலை பள்ளியை சேர்ந்த கீர்த்திவாசன், ராகுல், சாணக்யா இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த குணசிவா, தீக்சயா, ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளியை சேர்ந்த சசி, வர்னீஷா ஸ்ரீ, சிந்தாமணி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த தர்ஷினி, சுபஸ்ரீ, ஸ்ரீ அகிலா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த தீபன், சாய், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஆனந்தகுமார், காந்தி பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த கவுதம் ஆகியோர் சுதந்திர தின பவள விழா ஜோதியை கையில் ஏந்தி தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். மராத்தான் ஓட்டம் ஸ்ரீதேவி திரையரங்கம் அருகில் துவங்கி சத்தி மெயின் ரோடு, அண்ணாமலையார் கோவில் சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்து முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி அன்பு , மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் விஜயலக்ஷ்மி, கிருஷ்ணவேணி, எஸ்.ஆர்.சி.மெட்ரிக் பள்ளி ஆசிரியர் முத்துக்குமார், எஸ்.என்.ஆர்.மெட்ரிக் பள்ளி ஆசிரியர் காளிமுத்து, சாணக்யா இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர் பிரகாஷ், ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளி நிர்வாகி கமல் ஜெயராஜ், சிந்தாமணி வித்யாலயா பள்ளி தாளாளர் லோகநாதன், சிவசக்தி பிளே ஸ்கூல் மற்றும் ஸ்ரீ அகிலா வித்யாலயா பள்ளி தாளாளர் வேலுசாமி, காந்தி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன், காந்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் கார்த்திக், புஞ்சை ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி நிறுவனர் பிரபு, விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் வாணி தர்மராசு , லோகநாதன், சதீஷ்குமார், ரமேஷ் குமார், பவானிசாகர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட தலைவர் உஷாராணி புஞ்சை புளியம்பட்டி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் வேலு, செயலாளர் கணேஷ், இளந்தென்றல் ஆம்புலன்ஸ் டிரஸ்ட் கதிர் மற்றும் பலர் பங்கேற்றனர்.