காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி- ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு..!

மைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்..

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஓமதூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இதய அடைப்பு எனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு இதய அமைப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நீதிமன்ற காவல் இன்றுடன் முடியும் நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, எப்படி இருக்கிறீர்கள் ? என அமைச்சர் செந்தில் பாலஜியிடம் நீதிபதி அல்லி கேட்டறிந்தார். அதற்கு வலி இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.