இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 1.20 லட்சம் கன அடியாக தொடர்கிறது.
தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன தேவைக்காக வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 20 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை தனது வரலாற்றில் 42 ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மேட்டூர் அணை கடந்த 8 மாதங்களில் இரண்டாவது முறையாக 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.