உதகை: நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) “தூய்மையே சேவை 2024” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையேற்று, துவக்கி வைத்து,
பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் தூய்மையே சேவை – 2024 பிரச்சாரம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை
நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சியில் உள்ள 250 தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதில் தூய்மை காவலர்களின் பங்கு முதன்மையானது. தூய்மை காவலர்கள் நமது மாவட்டதை சுத்தமாக வைத்திருப்பது போல், அவர்களது உடல் நலத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காகதான் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும், கோவை அபிராமி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம், எலும்பியல் மருத்துவம், கண் மருத்துவம் (உதகை ஐ பவுண்டேசன்), இதய பரிசோதனைகள் உள்ளிட்டவற்றிற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற வேண்டியவர்கள் நமது அரசு மருத்துவமனைகளிலேயே அனைத்து வசதிகளும் உள்ளதால், அங்கேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் ஆகவே இந்த மருத்துவ முகாமினை தூய்மை காவலர்கள் முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் ஏற்றுக் கொண்டனர். இம்முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் , உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ) மாதன், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், அண்ணாதுரை, ஊராட்சித்தலைவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கான முகாமிற்கு நீலகிரி மாவட்ட பல பகுதிகளில் இருந்து நகராட்சி ஊராட்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது உடலையும் உள்ள நோய்களை பரிசோதித்து மருத்துவர் உடைய அனைத்து ஆலோசனைகளையும் பெற்று பயனடைந்து சென்றனர், நடைபெற்ற இந்த இலவச அரசு தூய்மை சேவை தூய்மை காவலருக்கான முகாமை உதகை ஊராட்சி வட்டார வளர்ச்சி சலீம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது..
Leave a Reply