கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் உள்ள ரத்தனகிரி மலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.கோவில் மலை பாதையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து கோவில் நிர்வாகி புகழேந்தி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது மலைப்பாதையில் காட்டுக்குள் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. அவரது உடல் அருகில் மது பாட்டில்களும் சாணி பவுடரும் இருந்தது. மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது .அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.