கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி-உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம்-பிரதமர் அறிவிப்பு ..!

கேரளா மலப்புரத்தில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் மீட்பு பணி தீவிரம்..

பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பு!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தூவல் தீரம் (கடற்கரை பகுதியில்) சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் 22 பேர் கொண்ட பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கமாண்டர் அர்ஜுன் பால் ராஜ்புத் தலைமையில் ஆழ்நிலை நீர் மூழ்கி வீரர்களுடன் கேரள மாநிலத்தில் உள்ள திருசூர் பகுதியில் இருந்து விரைந்தனர். நீரில் மூழ்கிய நபர்களை தீவிர தேடுதல் பணியில் கேரளா மாநில அரசின் உயர் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் பணியாளர்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். 21ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 22 சடலங்களை தீவிரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த கேரள படகு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்..