சம்பளம் வழங்குவதில் முறைகேடு… தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்.!!

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார் இருந்தது. இந்த சூழலில் இன்று தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தின் வாயில் முன் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் நகரில் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் சாலைகளில் கிடந்தது. காலையிலிருந்து 3 மணி நேரமாக நடந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.கூடிய விரைவில் தற்போது உள்ள சென்னையைச் சேர்ந்த குமார் என்பவர் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். ஒப்பந்த மேற்பார்வையாளராக தினேஷ் கண்காணித்து வருகிறார் இவர்கள் இருவரையும் அழைத்துப் பேசி நாள் ஒன்றுக்கு 550 சம்பளத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் 1ஆம் தேதி வரவு வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பளத் தொகையில் பாக்கியுள்ள தூய்மை பணியாளர்களுக்கு
 உரிய சம்பளத்தை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து துப்புரவு பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தப் போராட்டத்தினால் தாராபுரம் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.