ஐபிஎல் 2024… 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி..!!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரராக டுப்ளிசஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பிய பெங்களூரு கேப்டன் டுப்ளிசஸ் மெல்ல மெல்ல அதிரடியை காட்ட தொடங்கினார். இதனால் ஆட்டம் லேசாக பெங்களூர் பக்கம் சென்றபோது முத்தாபிகுர் வீசிய பந்தில் டுப்ளிசஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த படித்தார் மற்றும் மேக்ஸ் வெல் இருவரும் ரன் எதுவும் எடுக்கமாம்ல் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராவத் மாற்று தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பந்துகளை வெளுத்து வாங்கினார். பவுடரிகளுக்கும் சிக்ஸர்களும் பந்துகளை பறக்க சிறிது நேரம் சென்னை ரசிகர்களுக்கு வேர்துகொட்டவே ஆரம்பித்தது.

இறுதிவரை நின்ற இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்துக்கொடுத்தது. இதையடுத்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த RCB அணி 173 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி தற்போது களத்தில் விளையாடி வருகிறது.

174 ரன்களை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவிந்தரா ஆகியோர் தொடங்கினர். சென்னை அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ருதுராஜ் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.