கனமழையால் வைகை அணை நிரம்பியது… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது 69.06 அடி வரை நீர் நிரம்யுள்ளது. நீர் வரத்து 2,388 கன அடி ஆக இருக்கக்கூடிய நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 699 கன அடியாக உள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழையால் நிரம்பிய வைகை அணை – கரையோர பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என்றும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஆற்றை கடக்கவும், அதில் குளிக்கவோ அதன் முன் நின்று செல்பி எடுக்கவோ வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.