வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் அன்னையப்பர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் விஷ்வா (வயது 21 )பி. எஸ் .சி. பட்டதாரி.படித்து முடித்துவிட்டு கடந்த 2ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருந்தார்.வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் சுனிதா துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.