கோவை உக்கடம் ஜி. எம். நகர், கோட்டை புதூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 55) இவர் ஐந்து மூக்கு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் உக்கடம் வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக கிடந்தார்.இது குறித்து அவரது மனைவி ரபியா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் குளக்கரையில் நடந்து வந்த போது மயக்கம் ஏற்பட்டு தண்ணீருக்குள் தவறி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply