கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மின் மையானம் வேண்டாம் ஒத்தக்கால் மண்டபம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

கோவையை அடுத்துள்ள, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள்,சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியது, எங்கள் பேரூராட்சியில் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளது . பேரூராட்சியில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் பொது மின்மயானம் அமைக்க , பொதுமக்களிடமும் ஆலோசனைகளை கேட்காமலும் ,கூட்டங்கள் போடாமலும் , பொது அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்காமலும்,பெரும்பான்மையான பொதுமக்களின் கருத்தை பொருட்படுத்தாமல், பொது மின்மயானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள், எதிர்ப்பையும் மீறிநடை பெற்று கொண்டிருக்கிறது . இந்த பொது மின்மயானம் கொண்டு வருவதால் எங்கள் பேரூராட்சியில் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன . 1 ) மின்மயானம் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் . 2 ) பொள்ளாச்சி கோவை NH ரோட்டில் மின்மயானம் அமைய இருப்பதால் ஒத்தக்கால்மண்டபம் கிராமத்துக்கு மக்கள் பயன்பாட்டுக்கு பேருந்துகள் வராமல் மேம்பாலத்துக்கு மேல் சென்று விடும், மேலும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று  அமைச்சர்  செந்தில்பாலாஜி  பொதுமக்களுடன் சென்று
மின்மயானம் எங்கள் பகுதியில் வேண்டாம் என்று எடுத்து கூறினோம். அவரும் எங்கள் மனுவை கருணையுடன் பரிசீலனை செய்து, கோவை மாவட்ட ஆட்சிதலைவரிடம் எடுத்துக்கூறி, பொதுமக்கள் விரும்பாத,பொதுமக்கள் எதிர்கின்ற, இந்த மின்மயானம் உங்கள் பகுதிக்கு வேண்டாம் என கூறி கோவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசி நல்லதொரு முடிவை பெற்று உங்களுக்கு தகவல் சொல்கிறோம். என எங்களை அனுப்பிவைத்தார் . பொதுமக்களாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து மின்மயானம் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல போராட்டங்களை நடத்தியும், முறையாக செயல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் ,  அமைச்சர்  சந்தித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம் . இதனையும் பொருட்படுத்தாமல், ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிக்கு,
மின்மயானம் வரும் பட்சத்தில், இது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறும் என்பதையும், தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே , ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி பகுதியில் பெரும்பான்மையான பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு மின்மயானம் அமைக்க வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்  என்று கூறினார்.