கோவையில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 937 பேருக்கு அபராதம்..!

கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

இது குறித்து மாநகரபோலீஸ் கமிஷனர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
கோவையில் 90 சத வீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் 10 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை.

சாலை விதிகளை கடைபிடிப்பதன்மு க்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் 15 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 400 போலீசார், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை அழைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். வாரம் ஒருமுறை வெவ்வேறு நாட்களில் இதுபோன்ற சிறப்புத் தணிக்கை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2,543 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த 1,282 பேரில், 937 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 345 பேரை எச்சரித்து அனுப்பி உள்ளோம். மொத்தம் 3,875 பேருக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.