வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது .

இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .மேற்கு தொடர்ச்சி மலையில் இனி வரும் காலங்களில் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ( புதன்) முதல் வெள்ளியங்கிரி மலை ஏறி செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் இந்த அறிவிப்பை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..