கோவையில் ஒரே நாளில் 2 பள்ளி மாணவிகள் திடீர் மாயம்..!

கோவை அருகே உள்ள மதுக்கரை மலைச்சாமி கோவில் விதியை சேர்ந்தவர் சோமசுந்தர் மூர்த்தி. இவரது மகள் சபரிஸ்வரி (வயது 15 ) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இவர் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த சபரி ஸ்வரி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தாயார் மரகதமணி மதுக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோல பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் ஆலங்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகள் அக்ஷயா தேவி (வயது 16 )அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர் .திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை மணிகண்டன் ஆனைமலை போலீசில் புகார். செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.