கோவை: கோவை புலியகுளம் 7-வது வீதியில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் ( வயது 50))மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று இவர் அவரது கடையின் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்ற ஜோஸ்வா,பெரிய சங்கீதா, சின்ன சங்கீதா ஆகியோர் அங்கு வந்தனர். முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து 3 பேரும் சேர்ந்து இமானுவேலை திட்டி இரும்பு தடியால் தாக்கினார்கள் . இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரது சத்தம் கேட்டு கடைக்குள் இருந்து வெளியே வந்த அவரது மனைவி எஸ்தர் ஜெப ரத்தினத்தையும் அவர்கள் தாக்கி கீழே பிடித்து தள்ளினார்கள்.. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஜோஸ் என்ற ஜோஸ்வா ,பெரிய சங்கீதா, சின்ன சங்கீதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு- சட்டம. கொலை முயற்சி உட்பட 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply