மொபட்டில் 3 கிலோ கஞ்சா கடத்தல் – வட மாநில தொழிலாளி கைது..!

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலை சுல்தான் பேட்டையில் பல்லடம்- பாப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த துக்கிராம் பாரிக் (வயது 39) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார் .இவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவும்,கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.